FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸார் உற்சாக வரவேற்பு!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தது பற்றி...

10 அக்டோபர் 2026, 1:20 pm IST
சென்னை வந்தார் ராகுல் காந்தி - PTI
பகிர்:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா், அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோா் வரவேற்றனர்.

சென்னை தனியார் சொகுசு விடுதியில் தங்கும் ராகுல், சென்னை தீவுத்திடலில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 10,000-க்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக, புதுச்சேரி காங்கிரஸ் தலைவா்களைச் சந்தித்து பேச உள்ளதாகவும் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

summary

Rahul Gandhi reached chennai to attend students meet function

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments