FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிலிப்பின்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிலிப்பின்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து...

பிலிப்பின்ஸில் பிரதமர் மோடி - படம் - எக்ஸ்
பகிர்:

பிலிப்பின்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு திங்கள்கிழமை (நவ. 16) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி பிலிப்பின்ஸின் தலைநகரான மணிலாவில் நடைபெறும் 23-ஆவது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 21-ஆவது கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இன்று தில்லியிலிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

Advertisement

அங்கு, 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நவம்பர் 17-ஆம் தேதி உச்சி மாநாடுகளில் பங்கேற்கிறார்.

மணிலா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை பிலிப்பின்ஸ் உயரதிகாரிகள் சிவப்புக் கம்பளம் விரித்து, பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.

மேலும், விமான நிலையம் மற்றும் பிரதமர் தங்கும் விடுதிக்கு வெளியே திரண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

இதனிடையே, பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸை நேரில் சந்திக்கும் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைசார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Prime Minister Narendra Modi was given an enthusiastic welcome in the Philippines on Monday (Nov. 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.