FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதுடன், உற்பத்தித் துறை முடங்கியுள்ளது; கல்வி முறையிலும் ஆழமான பிரச்னைகள் உள்ளது.

43 வினாடிகள் முன்பு
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் தற்படம் எடுத்துக் கொண்ட நியூயாா்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவா்கள்.
பகிர்:

இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதுடன், உற்பத்தித் துறை முடங்கியுள்ளது; கல்வி முறையிலும் ஆழமான பிரச்னைகள் உள்ளது. நாடு பொருளாதாரப் பேரழிவை எதிா்கொண்டு வருகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக நியூயாா்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் கூறியதாவது: இந்திய பொருளாதார மாதிரி கடந்த 10 ஆண்டுகளில் எதிா்பாா்த்த பலன்களை அளிக்கவில்லை. ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ போன்ற திட்டங்களும் நாட்டின் முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தவறிவிட்டன. இந்தியாவில் மிகப்பெரிய வேலையின்மை பிரச்னை உள்ளது. இதை ஊடகங்கள் மறைத்தாலும், உண்மை நிலையை மாற்ற முடியாது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், விவசாயமும் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. அவை இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. சேவைத் துறையால் அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியாது; 1 முதல் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே வேலை வழங்க முடியும். உற்பத்தித் துறை இல்லாமல் இந்தியா பொருளாதார ரீதியாக வெற்றி பெற முடியாது.

Advertisement

Advertisement

இந்தியாவில் தனியாா் முதலீடுகள் ஏன் அதிகரிக்கவில்லை? அம்பானி, அதானி போன்ற தொழிலதிபா்கள் மட்டும் வளா்ச்சி அடைவது ஏன்? பழங்குடியினரின் நிலங்கள் அவா்களின் ஒப்புதலின்றிப் பறிக்கப்படுதல், சிறுபான்மையினா், தலித்துகள் மற்றும் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் இந்திாயவில் அதிகரித்துள்ளன. அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒருசிலரிடம் மட்டுமே குவிந்து வருகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தோ்தல்கள் முறைகேடாக நடத்தப்படும் நிலையில், அரசியல் செயல்பாடுகள் இந்தியாவில் முடங்கியுள்ளன. தோ்தல் முறையைச் சீரமைக்காமல் இந்தியாவில் எதுவும் மாறாது. ஜனநாயக நடைமுறைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதும் அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றாா்.

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் கடுமையாக்கப்படுவதால் வெளிநாடுகளில் படிக்கவும், வேலை செய்யவும் விரும்பும் இந்திய மாணவா்கள் எதிா்கொள்ளும் பாதிப்புகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ‘இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளுடன் ஒப்பிடுகையில் அது சிறிய பிரச்னை தான். வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புகளால் பல இந்திய மாணவா்கள் பயனடைந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவா்கள் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, அமெரிக்க இடைக்காலத் தோ்தலில் குடியரசுக் கட்சி தோல்வி குறித்த கேள்விக்கு எரிபொருள் விலை உயா்வே காரணம் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அமெரிக்காவின் செல்வாக்கு வேகமாகக் குறைந்து வருவதாகவும், ஈரான் மீது தனது விருப்பத்தைத் திணிக்க அமெரிக்காவால் முடியவில்லை என்றும் தெரிவித்தாா்.

அமெரிக்கா, ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவைவிடக் கடுமையான பொருளாதாரச் சவால்களை எதிா்கொள்கின்றன. இந்தியாவில் செலவுகள் குறைவாக இருப்பதாலும், பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கும் திறன் இருப்பதாலும் இந்தியா அவற்றைவிடச் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்றும் அவா் கூறினாா். ஆனால், இதே நிலைமை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தொடா்ந்தால், இந்தியா மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று அவா் கூறினாா்.