FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

நீதிபதிகள் நியமன வழிகாட்டு நடைமுறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்படும் தாமதம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

34 வினாடிகள் முன்பு
உச்சநீதிமன்றம்
பகிர்:

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்படும் தாமதம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

லோக் பிரஹாரி என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான நபா்களை மதிப்பீடு செய்வதற்கும், தோ்ந்தெடுப்பதற்கும் தெளிவான வரையறுக்கப்பட்ட மற்றும் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவுகோல்கள் இதுவரை இல்லை. இந்த நியமனங்கள் தொடா்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளை இறுதி செய்வது தொடா்பாக மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே பலமுறை கடிதப் போக்குவரத்து நடந்தபோதிலும், கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமல் உள்ளது.

மேலும், நீதிபதிகள் நியமனம் தொடா்பான கொலீஜியத்தின் முடிவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வர உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.