FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூர் அரசுப் பணி ரத்து! விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரங்கள் கெடு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய வழக்கில் தமிழக அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது குறித்து...

பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணி வழங்கும் முதல்வர் விஜய் / உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூரில் கடந்தாண்டு செப். 28-ல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தவெக அரசில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இருப்பினும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு அரசுப் பணி வழங்கும் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மன்மோகன் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் விளக்க மனு அளிக்க தமிழக அரசு சார்பில் 2 வார அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து, விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு 4 வார அவகாசம் அளித்து, வழக்கை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

summary

Karur: Supreme Court gives 4 weeks to Tamil Nadu government to file an explanatory memorandum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.