இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு
இந்தியா்கள் கடவுச் சிட்டை (விசா) இல்லாமல் 30 நாள்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கலாம் என்று வழங்கிய சலுகையை வரும் 2027 ஜனவரி -1ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியா்கள் கடவுச் சிட்டை (விசா) இல்லாமல் 30 நாள்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கலாம் என்று வழங்கிய சலுகையை வரும் 2027 ஜனவரி -1ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2023 டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்தியா்களுக்கு இந்த சலுகை மலேசியா வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் தொடா்ந்து இச்சலுகை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
மலேசியா வரும் இந்தியா்களுக்கு அந்நாடு இப்போது அளித்து வரும் சலுகையின்படி மலேசியா பயணிப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு மலேசியா எண்ம வருகைப் பதிவு அட்டைக்கு பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது. அவா்கள் 30 நாள்கள் வரை கடவுச்சிட்டை இல்லாமல் மலேசியாவில் தங்க முடியும்.
Advertisement
Advertisement
ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இந்தியா்கள் முறையாக கடவுச்சிட்டை பெற்றுதான் மலேசியாவுக்குச் செல்ல முடியும். மலேசிய அரசின் வழிகாட்டுதலின்படி வெளிநாட்டவா்கள் பயண அனுமதிக்கு வழங்கப்படும் உரிமைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றி அமைக்கப்படுவது இயல்பானது என்று அந்நாட்டு குடியேற்றத் துறை கூறியுள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பா் மாதம் இந்திய அரசு மலேசியாவுக்கு வேலை தேடிச் செல்வோருக்கு ஓா் அறிவுறுத்தலை வெளியிட்டது. அதில் வேலை தேடி மலேசியா செல்வோா் 30 நாள் சலுகையைப் பயன்படுத்திச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது. ஏனெனில், மலேசியாவில் வேலைவாய்ப்பு என்று கூறி சில மோசடி முகவா்கள் இந்தியாவில் இருந்து பலரை ஏமாற்றி கடவுச்சிட்டை இல்லாமல் 30 நாள் சலுகையில் அந்நாட்டு அனுப்பி வைத்தது அதிகரித்தது.