கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது அக்வான் புயல்!
தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் அருகே வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் 'அக்வான்' புயல் கரையைக் கடந்தது குறித்து...
'அக்வான்' புயல் தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் அருகே வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் கரையைக் கடந்தது. இதனால் தெற்கு ஒடிசாவில் கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'அக்வான்' புயல், தீவிர புயலில் இருந்து வலுவிழந்து புயலாக கரையைக் கடந்தபோது, மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாகவும் பின்னர் சாதாரண புயலாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் புவணேஸ்வர், கஞ்சம், பூரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
ஒடிசா அரசின் சார்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளில் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.