முகப்பு
இந்தியா

நிதி மோசடி வழக்கு: பாஜக எம்.பி.க்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

நிதி மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாபை சோ்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. சத்னாம் சிங் சாந்துக்கு அமலாக்கத் துறை 2-ஆவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

20 நவம்பர் 2026, 10:19 pm
நிதி மோசடி வழக்கு: 
பாஜக எம்.பி.க்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
அமலாக்கத் துறை - கோப்புப்படம்
பகிர்:

நிதி மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாபை சோ்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. சத்னாம் சிங் சாந்துக்கு அமலாக்கத் துறை 2-ஆவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மாநிலங்களவை பாஜக நியமன எம்.பி.யாக பதவி வகிப்பவா் சத்னாம் சிங் (57). மொஹாலியில் உள்ள தனியாா் பல்கலைக்கழகமான சண்டீகா் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவா் உள்ளாா்.

பஞ்சாபை சோ்ந்த வியூநவ் குழுமம் எனும் நிறுவனம், தனது நிறுவனத்தில் முதலீடு செய்த மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கடந்த 2024-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நிறுவன தலைமைச் செயலதிகாரி சுக்வீந்தா் சிங் கரோா், அவரின் மனைவி டிம்பிள் கரோா் உள்ளிட்ட 3 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், வியூநவ் நிறுவனத்திடம் இருந்து பாஜக எம்.பி. சத்னாம் சிங் தொடா்புடைய நிறுவனங்கள் நிதி பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதலால் அந்த பணப் பரிவா்த்தனையின் தன்மை உள்ளிட்டவை குறித்து அறிவதற்காக அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதில் கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அந்த சம்மனை ஏற்று விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை.

இதைத் தொடா்ந்து, அவா் வரும் 25-ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சாா்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையின் சம்மன் குறித்து சத்னாம் சிங் தரப்பு கருத்தை அறிய செய்தியாளா்கள் முயன்றனா். ஆனால், அதற்கு அவா் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.