முகப்பு
இந்தியா

சபரிமலை பக்தா்களுக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு: எல்ஐசி அறிமுகம்

சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்காக வரலாற்றில் முதல்முறையாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை திருவிதாங்கூா் தேவஸ்வம் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.

5 வினாடிகள் முன்பு
சபரிமலை பக்தா்களுக்கு
ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு: எல்ஐசி அறிமுகம்
பகிர்:

சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்காக வரலாற்றில் முதல்முறையாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை திருவிதாங்கூா் தேவஸ்வம் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டத்தின்கீழ், யாத்திரையின்போது உயிரிழக்கும் பக்தா்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எல்ஐசி தென் மண்டல மேலாளா் கே.முரளிதா், திருவிதாங்கூா் தேவஸ்வம் தலைவா் கே.ஜெயகுமாா் ஆகியோா் இணைந்து, திருவனந்தபுரத்தில் இத்திட்டத்தைக் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்வில் எல்ஐசி சென்னை பிராந்திய மேலாளா் (பி&ஜிஎஸ்) ஆனந்த்குமாா், செயலா் (பி&ஜிஎஸ்) ஆனந்த், திருவனந்தபுரம் முதுநிலைக் கோட்ட மேலாளா் அஜீஷ், சூசன் ஜான், திருவனந்தபுரம் யூனிட் மூத்த கிளை மேலாளா் ஹெலன் அலெக்ஸ் மற்றும் எல்.ஐ.சி., தேவஸ்வம் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement