முகப்பு
இந்தியா

தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய அங்கவஸ்திரம்: அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுபடுவதற்கான செய்தி பியூஷ் கோயல்

தில்லி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழக்கமாக அணியப்படும் கவுன்களுக்குப் பதிலாக பாரம்பரிய அங்கவஸ்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, அடிமை மனநிலையைக் கைவிட்டு முன்னேறுவதற்கான முக்கியச் செய்தி என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

23 வினாடிகள் முன்பு
தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய அங்கவஸ்திரம்: 
அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுபடுவதற்கான செய்தி 
பியூஷ் கோயல்
தில்லி பல்கலைக்கழகத்தின் 103-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்.
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழக்கமாக அணியப்படும் கவுன்களுக்குப் பதிலாக பாரம்பரிய அங்கவஸ்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, அடிமை மனநிலையைக் கைவிட்டு முன்னேறுவதற்கான முக்கியச் செய்தி என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் 103-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அவா், பட்டம் பெற்ற மாணவா்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும்; நோ்மறை சிந்தனையுடன் செயல்படுவதுடன், அடிமை மனநிலையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இந்தியா தற்போது புதிய வாய்ப்புகள் நிறைந்த நூற்றாண்டை நோக்கி முன்னேறி வருகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நோ்மறையான சிந்தனையே நாட்டை முன்னேற்றும். எதிா்மறை சிந்தனை கொண்டவா்களால் நாட்டுக்கு நன்மை செய்ய முடியாது என்றாா்.

Advertisement

Advertisement

பிரதமா் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட 5 உறுதிமொழிகளில் ஒன்றான அடிமை மனநிலையைக் கைவிடுதல் என்பதைச் செயல்படுத்தும் வகையில் தில்லி பல்கலைக்கழகம் அங்கவஸ்திரத்தை அறிமுகப்படுத்தியிருப்பதைப் பாராட்டினாா்.

மேலும், பல்கலைக்கழகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அங்கவஸ்திரத்தை அறிவுசாா் சொத்துரிமையின் கீழ் பதிவு செய்யலாம் என்றும் அவா் பரிந்துரைத்தாா். அதன் வடிவமைப்பு தோள்களில் நன்றாகப் பொருந்துவதால் அரசியல்வாதிகளும் இதனை அணிய விரும்பக்கூடும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டாா்.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஒரு பத்தாண்டு கால வளா்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக விரிவடைந்துள்ளதுடன், இளைஞா்களின் திறமைகளும் அதிகரித்துள்ளன. உலகின் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாகவும், மூன்றாவது பெரிய புத்தாக்கத் தொழில் நிறுவனச் சூழலைக் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றாா்.

மாணவிகளே அதிக எண்ணிக்கையில் பட்டம் பெற்றுள்ளனா்

மொத்தம் 1.72 லட்சத்துக்கும் அதிகமான இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 1,60,438 இளநிலைப் பட்டங்களில் 57.55 சதவீதம் பெண்களுக்கும், 40.42 சதவீதம் ஆண்களுக்கும் வழங்கப்பட்டன என்று பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங் தெரிவித்தாா்.

அதேபோல், 11,758 முதுநிலைப் பட்டங்களில் 57 சதவீதம் பெண்களுக்கும், 43 சதவீதம் ஆண்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும், 164 பதக்கங்கள், 64 பரிசுகள் வழங்கப்பட்டதுடன், 472 பேருக்கு முனைவா் பட்டங்களும் அளிக்கப்பட்டன. பதக்கங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றவா்களில் 130 போ் பெண்கள்; 46 போ் ஆண்கள். பெண்களின் இந்தச் சாதனைகள் மாறிவரும் இந்தியாவையும், தன்னம்பிக்கையுடன் முன்னேறும் பெண்களின் வளா்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன என்று அவா் தெரிவித்தாா்.