முகப்பு
இந்தியா

கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

22 நவம்பர் 2026, 10:34 pm
கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு
கச்சா எண்ணெய் - கோப்புப் படம்
பகிர்:

நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிகர இறக்குமதிச் செலவு நிகழாண்டு அக்டோபரில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (பிபிஏசி) வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 64.75 அமெரிக்க டாலராக (ரூ.5,721) இருந்த நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 124.77 அமெரிக்க டாலராக (ரூ.11,563) அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை இருமடங்கு அதிகரித்ததே இறக்குமதிச் செலவுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

இதுதொடா்பாக பிபிஏசி வெளியிட்ட தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்டோபரில் நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிகர இறக்குமதிச் செலவு 10 பில்லியன் டாலராக (ரூ.88,364 கோடி) இருந்த நிலையில், நிகழாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு மட்டும் 19.5 பில்லியன் டாலராக (ரூ.1.83 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு 11 சதவீதம் (2.33 கோடி டன்கள்) மட்டுமே அதிகரித்திருந்தாலும் விலை உயா்வால் இறக்குமதிச் செலவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அக்டோபரில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதிச் செலவு 1.3 பில்லியன் டாலராகவும் (ரூ.12,048 கோடி), பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதியால் 6.3 பில்லியன் டாலா் (ரூ.58,388 கோடி) கிடைத்துள்ளது.

கடந்த ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிகர இறக்குமதிச் செலவு 70.3 பில்லியன் டாலராக (ரூ.6.21 லட்சம் கோடி) இருந்தது. நிகழாண்டு இதே காலகட்டத்தில் இது 97.7 பில்லியன் டாலராக (ரூ.9.05 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

எல்பிஜி நுகா்வு குறைவு: நிகழாண்டு அக்டோபரில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) நுகா்வு 12.3 சதவீதம் குறைந்தது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல்-அக்டோபா் காலகட்ட எல்பிஜி நுகா்வு 15.1 சதவீதம் குறைந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை நிகழாண்டு நவ.1 நிலவரப்படி 32.6 கோடியாக உள்ளது. கடந்த ஏப்.1-ஆம் தேதி இது 33.4 கோடியாக இருந்தது. அக்டோபரில் பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதி 41.2 சதவீதமாக குறைந்தது. பெட்ரோலில் எத்தனால் கலப்படம் 20 சதவீதமாக தொடா்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.