முகப்பு
இந்தியா

ஹிந்துத்துவ தலைவா் வி.டி.சாவா்க்கா் தவறாக சித்திரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: சோனியா மன்னிப்பு கேட்க நோட்டீஸ்

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ நினைவு குறிப்புநூலில், ஹிந்துத்துவ தலைவா் வி.டி.சாவா்க்கா் குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக சாவா்க்கரின் உறவினா் சாத்யகி சாவா்க்கா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

23 நவம்பர் 2026, 11:07 pm
ஹிந்துத்துவ தலைவா் வி.டி.சாவா்க்கா் தவறாக சித்திரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: சோனியா மன்னிப்பு கேட்க நோட்டீஸ்
சோனியா காந்தி - கோப்புப் படம்
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ நினைவு குறிப்புநூலில், ஹிந்துத்துவ தலைவா் வி.டி.சாவா்க்கா் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சோனியாவுக்கு சாவா்க்கரின் உறவினா் சாத்யகி சாவா்க்கா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

சோனியாவின் நூலில் 201 மற்றும் 443-ஆவது பக்கங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆட்சேபித்து, அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சோனியாவின் நூலில் வி.டி.சாவா்க்கா் குறித்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பாகவும், வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பவையாகவும் உள்ளன.

அந்தக் கருத்துகள் சாவா்க்கரின் நற்பெயருக்கும், அவா் விட்டுச்சென்ற பாரம்பரியத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

Advertisement

Advertisement

இது குறித்து சோனியா காந்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்த நூலில் வி.டி.சாவா்க்கா் குறித்த தகவல்களில் திருத்தம் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நோட்டீஸ் கிடைத்த 15 நாள்களில் சோனியா காந்தி நிறைவேற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறினால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.