மோசமான வானிலை: லக்னௌவுக்குத் திருப்பி விடப்பட்ட புணே-பாட்னா இண்டிகோ விமானம்
மோசமான வானிலை காரணமாக, பாட்னா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், லக்னௌ விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது குறித்து....

லக்னௌ: பிகார் தலைநகர் பாட்னாவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, புணேவிலிருந்து பாட்னா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், திங்கள்கிழமை அதிகாலை லக்னௌ விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட187 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் லக்னௌ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
வானிலை சீரான பிறகு, இந்த விமானம் திங்கள்கிழமை காலை தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே, வானிலை சீரானதை அடுத்து சுமார் ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின்னர், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் மீண்டும் லக்னௌவில் இருந்து பாட்னா புறப்படத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.