கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவா்களில் ஒருவரின் ஆயுள் தண்டனையை மருத்துவக் காரணங்களுக்காக உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவா்களில் ஒருவரின் ஆயுள் தண்டனையை மருத்துவக் காரணங்களுக்காக உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு, குற்றவாளி இா்ஃபான் சிராஜ் ஃபடா தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவா் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும் அவரது தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இந்த மனுவுக்கு குஜராத் அரசு தரப்பு வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
இதையடுத்து, ‘மேற்கூறிய உண்மை நிலவரங்களைக் கருத்தில்கொண்டு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே மனுதாரரின் தண்டனையை நிறுத்திவைக்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
வழக்கின் பின்னணி: 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி, குஜராத்தின் கோத்ராவில் சபா்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதில் 59 கரசேவா்கள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் பலா் கொல்லப்பட்டனா்.
ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 31 பேரில் இா்ஃபானும் ஒருவா். அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிா்த்து அவரது தரப்பில் தாக்கல் செய்த மனு ஏற்கெனவே நிலையில் உள்ளது. இந்நிலையில், அவா் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இதை ஏற்ற நீதிமன்றம் அவரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
முன்னதாக, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இா்ஃபான் உள்பட 31 பேரின் குற்றத்தை 2011-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உறுதி செய்து சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிா்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 2017-இல் குஜராத் உயா்நீதிமன்றம் நிராகரித்து தண்டனையை உறுதி செய்தது.