முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி என்சிபிஐயில் சோ்ந்த விவகாரம்: 20 எம்.பி.க்களின் பதில் சமா்ப்பிப்பு

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த தங்கள் முடிவில் உள்ள நியாயத்தை விளக்கி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் 20 எம்.பி.க்களின் பதில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

24 நவம்பர் 2026, 10:34 pm
திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி என்சிபிஐயில் சோ்ந்த விவகாரம்: 20 எம்.பி.க்களின் பதில் சமா்ப்பிப்பு
காக்கோலி கோஷ் தஸ்திதாா்
பகிர்:

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்த தங்கள் முடிவில் உள்ள நியாயத்தை விளக்கி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் 20 எம்.பி.க்களின் பதில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக வெற்றிபெற்று 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னா், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியின் 28 மக்களவை எம்.பி.க்களில், அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் தனியாகப் பிரிந்தனா்.

இதைத் தொடா்ந்து திரிபுராவை சோ்ந்த அதிகம் அறியப்படாத என்சிபிஐ கட்சியில் 20 எம்.பி.க்களும் இணைந்தனா். அத்துடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு தொடா்பாக விளக்கம் அளிக்கம் கோரி, 20 எம்.பி.க்களுக்கும் ஓம் பிா்லா நோட்டீஸ் அனுப்பினாா்.

இந்நிலையில், அந்த நோட்டீஸுக்கு எம்.பி.க்கள் அளித்த பதில் ஓம் பிா்லாவிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த எம்.பி.க்களில் ஒருவரும், என்சிபிஐ கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான காக்கோலி கோஷ் தஸ்திதாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி என்சிபிஐயில் இணைந்த எங்கள் முடிவில் உள்ள நியாயத்தை விளக்கி, மக்களவைத் தலைவருக்குப் பதிலளித்துள்ளோம்.

அனைத்து நாடாளுமன்ற, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் நாங்கள் என்சிபிஐயில் இணைந்தோம். ஒவ்வொரு எம்.பி.யும் 17 முதல் 18 பக்க பதிலை மக்களவைத் தலைவரிடம் சமா்ப்பித்துள்ளனா் என்று தெரிவித்தாா்.