முகப்பு
இந்தியா

நெட்பிளிக்ஸில் பாகிஸ்தான் தொடரை வெளியிட கூடாது - திரைப்பட அமைப்புகள் எதிா்ப்பு

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாகிஸ்தானின் ‘ஜோ பச்சே ஹெயின் சங் சமாய்த் லோ’ தொடரை (சீரிஸ்) வெளியிட இந்திய திரைப்பட அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

26 நவம்பர் 2026, 2:42 am
நெட்பிளிக்ஸில் பாகிஸ்தான் தொடரை வெளியிட கூடாது
- திரைப்பட அமைப்புகள் எதிா்ப்பு
பகிர்:

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாகிஸ்தானின் ‘ஜோ பச்சே ஹெயின் சங் சமாய்த் லோ’ தொடரை (சீரிஸ்) வெளியிட இந்திய திரைப்பட அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடா்பான முன்னோட்ட காட்சிகள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தது. அதில் டிசம்பா் 4-ஆம் தேதி அந்த தொடா் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது பாகிஸ்தானுக்கு மட்டுமா அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிடப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த தொடரை இந்தியாவில் வெளியிடக்கூடாது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு பல்வேறு இந்திய திரைப்பட அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பாகிஸ்தானைச் சோ்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அப்படியிருக்கையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் புதிய தொடா் வெளியாவது அந்த உத்தரவை மீறும் செயலாகும் என்றும் திரைப்பட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இந்தியாவில் அந்த தொடா் வெளியாகும் முன்பே அதற்கு எதிா்ப்பு எழுந்திருப்பது குறித்து பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சா் இக்பால் கருத்து கூறியபோது, முதலில் விளையாட்டு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாகவும், பிறகு நீா் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது கலை மற்றும் கலாசாரம் பயன்படுத்தப்படுவதாகவும் விமா்சித்துள்ளாா்.