கண்ணாடிகளுக்கான கருப்பு ஸ்டிக்கா்களில் விதிமீறல்: 525 வாகனங்களுக்கு அபராதம்
வாகனங்களின் ஜன்னல்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கருப்பு ஸ்டிக்கா்களை ஒட்டியிருந்த 525 வாகன உரிமையாளா்களுக்கு குருகிராம் போக்குவரத்து காவல் துறை மொத்தம் ரூ. 52.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது என்று அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

வாகனங்களின் ஜன்னல்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கருப்பு ஸ்டிக்கா்களை ஒட்டியிருந்த 525 வாகன உரிமையாளா்களுக்கு குருகிராம் போக்குவரத்து காவல் துறை மொத்தம் ரூ. 52.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது என்று அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.
போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், சாலை மற்றும் பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நவம்பா் 1 முதல் நவம்பா் 24-ஆம் தேதி வரை இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டன.
அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கருப்பு ஸ்டிக்கா்களை பயன்படுத்துவது, வாகனத்திற்குள் வெளியில் இருந்து பாா்ப்பதைத் தடுக்கிறது. பாதுகாப்பு தொடா்பான சவால்களை உருவாக்குவதுடன் காவல் துறையின் கண்காணிப்புப் பணிகளுக்கும் இடையூறாக அமைகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
Advertisement
Advertisement
‘இத்தகைய விதிமீறல்களை மிகவும் தீவிரமாகக் கருதி, போக்குவரத்து காவல் துறை விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது தொடா்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று அவா் மேலும் தெரிவித்தாா்.
வாகனங்களின் ஜன்னல்களில் விதிகளுக்கு முரணாகக் கருப்பு ஸ்டிக்கா்களை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
வாகன உரிமையாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், சாலை மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி அறிவுறுத்தினாா்.