பியுசிசி விதிமீறல்: ஒரே வாரத்தில் 3,048 பேருக்கு அபராதம் விதிப்பு
மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் (பியுசிசி) தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை 3,048 அபாரதச் சீட்டுகளை வழங்கியது குறித்து...
தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைத் திட்டத்தின் (கிராப்) கீழ், வடக்கு மண்டலம் முழுவதும் ஒரு வார கால சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் (பியுசிசி) தொடா்பான 3,048 அபாரதச் சீட்டுகளை தில்லி போக்குவரத்து காவல்துறை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நவம்பா் 8 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு மண்டலத்தின் அனைத்து போக்குவரத்து வட்டங்களிலும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் தொடா்பான இந்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டன.
வாகனங்களில் செல்லுபடியாகும் பியுசிசி-கள் இருப்பதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி, வாகனச் சோதனைகளைத் தீவிரப்படுத்தவும், கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவும், மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துக் காவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
வாகனப் புகையைக் கட்டுப்படுத்தும் வகையில், நவம்பா் 6 அன்று தில்லி - என்சிஆா் முழுவதும் தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டத்தின் (கிராப்) மூன்றாம் கட்டத்தை செயல்படுத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டு ஆவணங்களை வைத்திருப்பது குறித்தும், வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் பயணிகளின் பங்கு குறித்தும் அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும் போக்குவரத்து காவல்துறை கவனம் செலுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.