முகப்பு

மாணவர்களே எச்சரிக்கை! கோடிங் மட்டும் தெரிந்தால் போதாது! வளாகத் தேர்வில் பணியமர்த்துவது சரிவு

பொறியியல் படித்தவர்கள், கோடிங் மட்டும் தெரிந்தால் போதாது, வளாகத் தேர்வில் பணியமர்த்துவது சரிவடைந்திருப்பது குறித்து..

36 வினாடிகள் முன்பு
மாணவர்களே எச்சரிக்கை! கோடிங் மட்டும் தெரிந்தால் போதாது! வளாகத் தேர்வில் பணியமர்த்துவது சரிவு
மாணவர்களே எச்சரிக்கை! - file photo
பகிர்:

கல்லூரிகளில் நடக்கும் வளாகத் தேர்வில், வெறும் அடிப்படை கோடிங் மட்டும் தெரிந்திருந்தால், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிவாய்ப்புகளை பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

உலகம் முழுவதும் செய்யறிவின் தாக்கத்தால் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில், பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கும் விகிதம் வெகுவாகக் குறைட்நதிருக்கிறது.

தமிழ்நாட்டில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு அண்ணா பல்கலையில் படித்த 498 பேர் கடந்த ஆண்டு இந்த நவம்பரில் மென்பொருள் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட நிலையில்இந்த ஆண்டு 416 பேர் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.

எனவே, மாணவர்கள், செய்யறிவு கருவிகளைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்க கல்வி நிறுவனங்களும், வெறும் கோடிங் தெரிந்தால் வேலை கிடைக்காது என்பதை மாணவர்களும் உணர்ந்து அடுத்தக்கட்ட நிலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

தகுதிவாய்ந்த மாணவர்கள் நல்ல ஊதியத்துடன் பணியமர்த்தப்படும் சூழலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதலால், மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Students, take note! Knowing how to code is not enough; campus placements are on the decline.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.