ஐஐடி ரூர்க்கி விடுதியில் மாணவர் தற்கொலை! 70 தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஐஐடி ரூர்க்கி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து 70 தேர்வுகள் ஒத்திவைப்பு...
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கியின் விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, ரத்தான 70 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த மாணவர் ஆயுஷ் ராஜௌரியா(19) ஐஐடி ரூர்க்கியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பிஎஸ்-எம்எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ராஜாரியா ஐஐடி வளாகத்தில் இருந்து தனது விடுதி அறையில் கடந்த வியாழக்கிழமை (நவ. 12) இரவு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவரின் தற்கொலைக்கு ஐஐடி ரூர்க்கி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 13) ரத்து செய்யப்பட்ட சுமார் 70 தேர்வுகள் வரும் நவ. 22 ஆம் தேதி நடைபெறும் என ஐஐடி ரூர்க்கி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக, ஆயுஷ் ராஜௌரியாவின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், அவர் தனது மரணத்திற்கு யாரையும் குறை கூற வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].