FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐஐடி மாணவர் தற்கொலை: வளாகத்துக்கு வெளியே போராடியவர்கள் கைது!

ஐஐடி மாணவரின் மரணத்தைக் கண்டித்து வளாகத்துக்கு வெளியே போராடியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து...

22 செப்டம்பர் 2026, 3:52 pm IST
போராட்டக்காரர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றியபோது... - படம் - பிடிஐ
பகிர்:

ஐஐடி மாணவரின் மரணத்தைக் கண்டித்து, ஐஐடி மும்பை வளாகத்துக்கு வெளியே போராடிய இந்தியக் குடியரசுக் கட்சித் (அதாவலே) தொண்டர்கள் இன்று (செப். 22) கைது செய்யப்பட்டனர்.

ஐஐடி மும்பையில் சாஹில் வகோடே என்ற மாணவர் பி.டெக் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தேர்வின்போது, செல்போனில் ஏஐ பயன்படுத்தி தேர்வை எழுதியபோது, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் அந்த மாணவர் சிக்கியதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு மாணவர் கண்டெடுக்கப்பட்டதாக செப். 18 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இருப்பினும், தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு கல்வி நிறுவன ரீதியான துன்புறுத்தல்கள், சாதி பாகுபாடு, இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாஹிலின் மரணத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். இதையடுத்து, மும்பை ஐஐடி வளாகத்துக்கு வெளியே இன்று போராடிய இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) தொண்டர்களை காவல்துறை கைது செய்தது.

போராட்டக்காரர்கள், ‘சாஹிலுக்கு நீதி வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராடியது குறிப்பிடத்தக்கது.

summary

Activists of the Republican Party of India (Athawale), who were protesting outside the IIT Bombay campus to condemn the death of an IIT student, were arrested today (Sept. 22).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments