மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!
மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான பின்னணியை விசாரிப்பதற்காக ஐஐடி மும்பை சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது குறித்து...
மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான பின்னணியை விசாரிப்பதற்காக ஐஐடி மும்பை சிறப்புக்குழு ஒன்றை புதன்கிழமை (செப். 23) அமைத்துள்ளது.
சாஹில் வகோடே என்ற மாணவர் ஐஐடி மும்பையில் பி.டெக் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தேர்வின்போது, செல்போனில் ஏஐ (சாட் ஜிபிடி) பயன்படுத்தி தேர்வை எழுதியபோது, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் அந்த மாணவர் சிக்கியதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு மாணவர் கண்டெடுக்கப்பட்டதாக செப். 18 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு கல்வி நிறுவன ரீதியான துன்புறுத்தல்கள், சாதி பாகுபாடு, இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாஹிலின் மரணத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மாணவரின் மரணத்துக்கான காரணம் மற்றும் பின்னணியை ஆராய்வதற்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை ஐஐடி மும்பை நிர்வாகம் அமைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான பேராசிரியர் சூரியநாராயண தூல்லாவிடமும் அந்தச் சிறப்புக்குழு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
IIT Bombay constituted a special committee on Wednesday (Sept. 23) to inquire into the circumstances surrounding the student's suicide.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.