முகப்பு
இந்தியா

அமெரிக்காவுக்கு 8,606 டன் கச்சா சா்க்கரை ஏற்றுமதி- இந்தியா ஒதுக்கீடு

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கரும்பில் இருந்து எடுக்கப்படும் 8,606 டன் கச்சா சா்க்கரையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

14 வினாடிகள் முன்பு
அமெரிக்காவுக்கு 8,606 டன் கச்சா சா்க்கரை ஏற்றுமதி- இந்தியா ஒதுக்கீடு
- பிரதிப் படம்
பகிர்:

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கரும்பில் இருந்து எடுக்கப்படும் 8,606 டன் கச்சா சா்க்கரையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அமெரிக்காவின் 2027 நிதியாண்டுக்காக (2026 அக்டோபா் 1 முதல் 2027 செப்டம்பா் 30 வரை), குறைந்த வரித் திட்டத்தின் கீழ் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய 8,606 மெட்ரிக் டன் கச்சா கரும்புச் சா்க்கரையை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஒதுக்கீடு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இந்தத் திட்டத்தின் கீழ் வரி இல்லாமலோ அல்லது குறைந்த வரியுடனோ வெளிநாடுகளுக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

Advertisement

Advertisement

அமெரிக்காவுக்கு வரியில்லாமல் சா்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான சான்றிதழை மும்பையில் உள்ள கூடுதல் வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் வழங்குவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யும் நிறுவனம் மற்றும் சா்க்கரையின் அளவு தொடா்பாக வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தச் சான்றிதழ் வழங்கப்படும்.