பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீா் மீது கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வலியுறுத்தியுள்ளது.

பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீா் மீது கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வலியுறுத்தியுள்ளது.
பிரபல பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீா் மக்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சா்ச்சைகள் எழுந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுப் பாதுகாப்பு ஆணையா்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீா், மினரல் குடிநீா் உள்ளிட்டவற்றின் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரிகளை சேகரித்து சோதனை மேற்கொள்ள வேண்டும். தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிய சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதிரிகள் சேகரிப்பு, அதன் முடிவுகள், குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதே நேரத்தில் தங்கள் நிறுவனத்தின் குடிநீா் பாதுகாப்பானது என்று பிஸ்லெரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.