கேதார்நாத்துக்கு அரை மணி நேரத்தில் செல்லும் வசதி! உருவாகிறது ரூ.5,000 கோடி திட்டம்!
கேதார்நாத்துக்கு வெறும் அரைமணி நேரத்தில் செல்லும் ரோப்வே திட்டம் ரூ.5,000 கோடியில் செயல்படுத்தப்படவிருக்கிறது.
கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்கள் வெறும் அரை மணி நேரத்தில் செல்லும் வகையில், புதிய ரோப்வே திட்டம் ரூ.5000 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்படுளள்து.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.
இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பல்வேறு வழித்தடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் உள்ளன.
Advertisement
Advertisement
கேதார்நாத் ரோப்வே வசதியை சொந்த நிதியிலிருந்து ரூ.5000 கோடி செலவிட்டு செயல்படுத்தும் வகையில் முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.
தற்போது, கௌரிகுந்த் பகுதியிலிருந்து கேதார்நாத் செல்ல வேண்டும். வானிலை மற்றும் சரிவான பாதை போன்றவற்றால் இதில் பக்தர்கள் பயணம் செய்வது மிகுந்த சவாலானதாக உள்ளது. இந்த வழித்தடத்தில் ரோப்வே அமைக்கப்பட்டுவிட்டால், வெறும் 27 நிமிடங்களில் கேதார்நாத் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும்.