முகப்பு

உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம்

உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் மறுக்கப்பட்டது பற்றி...

9 வினாடிகள் முன்பு
உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம்
உமா் காலித், ஷா்ஜீல் இமாம். - கோப்புப்படம்
பகிர்:

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) வழக்கில் கைதுசெய்யப்பட்ட மாணவா் செயல்பாட்டாளா்கள் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்சிஆா்) ஆகியவற்றிற்கு எதிராக வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக காலித் மற்றும் இமாம் ஆகியோா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் செயல்பாட்டாளர்கள் பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், காலித் மற்றும் ஷா்ஜீல் இமாமுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளான நிலையில், இன்னும் விசாரணை நிறைவடையாத சூழலில், விசாரணை நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் கோரி மனு அளித்து நிராகரிக்கப்பட்டது.

கடைசியாக தில்லி உயர் நீதிமன்றத்தில் இவர்களின் ஜாமீன் மனு கடந்த செப். 31 ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி மோகனா உள்ளிட்டோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்தது.

அப்போது உமர் காலித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாகக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு, இடைக்கால ஜாமீன் கோரினார். ஷர்ஜீல் இமாம் தரப்பு வழக்கறிஞரும் இதே கோரிக்கையை முன்வைத்தார்.

இருப்பினும், இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், எதிர்தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் தில்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

summary

Supreme Court denies interim bail to Umar Khalid and Sharjeel Imam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.