முகப்பு

‘தலைமை அனுமதியின்றி பேட்டி, அறிக்கை வெளியிடக் கூடாது’.. அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

அதிமுக தலைமையின் அனுமதியின்றி நிர்வாகிகள் யாரும் பேட்டியளிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...

2 வினாடிகள் முன்பு
‘தலைமை அனுமதியின்றி பேட்டி,
அறிக்கை வெளியிடக் கூடாது’..  அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக தலைமையின் அனுமதியின்றி நிர்வாகிகள் யாரும் பேட்டியளிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு 'அஇஅதிமுக' கழகப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக பீடுநடைபோட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில், கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், அதிமுகவின் கருத்துகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து, கழகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்று, அதன்பின்னரே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் வேண்டும்.

அதேபோல், அறிக்கை ஏதேனும் வெளியிடுவதாக இருந்தால், கண்டிப்பாக தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கழக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், கழகத் தலைமையின் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Edappadi Palaniswami has stated that no party office-bearers should give interviews or express opinions without the permission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.