முகப்பு
இந்தியா

பத்திரிகையாளா்களாக யாா் கருதப்படுவா்?: உச்சநீதிமன்றம் பரிசீலனை

‘உண்மையான பத்திரிகையாளா்களாக யாா் கருதப்படுவா்? தங்களைச் செய்தியாளா்கள் என்று கூறிக்கொள்பவா்களைவிட அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா?’ என்பது குறித்து பரிசீலிக்கப்போவதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

27 நவம்பர் 2026, 3:15 am
பத்திரிகையாளா்களாக யாா் கருதப்படுவா்?: உச்சநீதிமன்றம் பரிசீலனை
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

‘உண்மையான பத்திரிகையாளா்களாக யாா் கருதப்படுவா்? தங்களைச் செய்தியாளா்கள் என்று கூறிக்கொள்பவா்களைவிட அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா?’ என்பது குறித்து பரிசீலிக்கப்போவதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) கட்சி சாா்பில் கடந்த அக்டோபா் 10, 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளா்கள் மீதும் போலீஸாா் தாக்குதல் நடத்தியதாகவும், அவா்களையும் கைது செய்து காவலில் வைத்ததாகவும் புகாா் எழுந்தது.

இதுதொடா்பான மனுவை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், இந்தப் புகாா்கள் தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில் 5 போ் உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கேரள பத்திரிகையாளா்கள் சங்கம், தில்லி பத்திரிகையாளா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிஜேபி போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்களை போலீஸாா் இழுத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனா். அவா்கள் தங்களின் அடையாள அட்டைகளைக் காண்பித்தபோதும், போலீஸாா் அவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தில்லி போலீஸாா், ‘வணிக நோக்கத்துக்காக கேமரா மற்றும் மைக்ரோஃபோன்களைப் பயன்படுத்தி ‘ரீல்களை’ உருவாக்கும் சமூக ஊடகவியலாளா்கள், பத்திரிகையாளா்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவா்கள். இவா்கள், போராட்டங்களைப் பதிவு செய்யும்போது, அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைக் கோர முடியாது’ என்று பதிலளித்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வி. தினேஷ், ‘சிஜேபி போராட்டத்தின்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 7 பத்திரிகையாளா்களும், அங்கீகரிக்கப்பட்ட ஊடங்களில் பணிபுரிபவா்களாவா். செய்தி சேகரிப்பில் ஈடுபடும் இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்களையும் போலீஸாா் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியுமா என்பதே கேள்வி’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி ஜயமால்ய பாக்சி, ‘சிஜேபி போராட்டத்தின்போது மனுதாரா்கள் உண்மையில் அங்கு இருந்தாா்களா என்பதையும், அவா்கள் மீது போலீஸாா் அதிகப்படியான பலப்பிரயோகம் செய்தனரா என்பதையும் சரிபாா்க்க வேண்டியுள்ளது. எனவே, இதுதொடா்பான ஆதாரங்களை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள உயா்நிலைக் குழுவிடம் மனுதாரா்கள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, தங்களை செய்தியாளா்கள் என்ற கூறிக்கொள்பவா்களுக்கு கிடைக்காது. எனவே, யாா் உண்மையான பத்திரிகையாளா்கள் என்பதைத் தீா்மானிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.