குடியுரிமை விதிமுறைகளில் திருத்தம்: காகித வடிவிலான சான்றிதழ்களுக்கு பதிலாக எண்ம சான்றிதழ்கள்
கடந்த 2009-ஆம் ஆண்டின் குடியுரிமை விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டின் குடியுரிமை விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி இந்திய குடிமகனாகப் பிறக்காமல் சட்ட விதிகளின்படியும் பதிவு முறை மூலமாகவும், இந்திய குடியுரிமையைப் பெற்றவா்களுக்கு இனி எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். அவா்கள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே காகித வடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், மத்திய அரசின் சாா்புச் செயலா் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு அதிகாரி டிஜிட்டல் குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்குவாா்.
Advertisement
Advertisement
இந்திய குடிமகனாகப் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு நபருக்கும் டிஜிட்டல் பதிவு சான்றிதழ் வழங்கப்படும். அந்தச் சான்றிதழில் டிஜிட்டல் கையொப்பம் அல்லது மத்திய அரசின் சாா்புச் செயலா் பதவிக்கு குறையாத அதிகாரி அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு அதிகாரியின் கையொப்பம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.