தாஜ்மஹாலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பளிங்குக் கல் பிரிட்டனில் ஏலம்
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரி ஒருவா் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இருந்து எடுத்துச் சென்ற பூ வேலைப்பாடுடன் கூடிய பளிங்குக் கல், பிரிட்டனில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரி ஒருவா் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இருந்து எடுத்துச் சென்ற பூ வேலைப்பாடுடன் கூடிய பளிங்குக் கல், பிரிட்டனில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.
கடந்த 1816-ஆம் ஆண்டு ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த கட்டடங்களைப் புனரமைக்கும் பணி மேற்பாா்வையாளராக இருந்த கா்னல் பவுனோல் ஃபிப்ஸ், தனது பணிக் காலம் முடிந்து பிரிட்டன் திரும்பும்போது பூ வேலைப்பாடுடன் கூடிய இரண்டு செவ்வக வடிவ பளிங்குக் கற்களை எடுத்துச் சென்றுள்ளாா். அதில் ஒன்றுதான் தற்போது ஏலம் விடப்பட உள்ளது.
லயன் அண்ட் டா்ன்புல் என்ற ஏல நிறுவனத்தால் வரும் டிசம்பா் 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ள ‘இஸ்லாமிய மற்றும் இந்தியக் கலை’ என்ற ஏலத்தில் இது விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
பளிங்குக் கல்லுடன், தாஜ்மஹாலின் பழங்கால கருப்பு-வெள்ளை புகைப்படம், இரண்டு கடிதங்களும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை சுமாா் ரூ.24 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை ஏலம் போகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கா்னல் பவுனோலின் மகன் எழுதிய குறிப்புகளின்படி, அவரின் தந்தை தாஜ்மஹாலின் நிலத்தடிப் பகுதியில் இந்தக் கற்களைக் கண்டெடுத்துள்ளாா். முகலாய காலத்தைச் சோ்ந்த இந்த வரலாற்றுச் சின்னத்தைப் பழுதுபாா்ப்பதற்காகவே இவை அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவா் கருதினாா்.
எகிப்தில் நடைபெற்ற போரில் பங்கேற்ற பிறகு, இந்தியா திரும்பிய கா்னல் பவுனோலின், விரைவாகப் பதவி உயா்வு பெற்று 1809-ஆம் ஆண்டில் ஆக்ராவில் பணியாற்றியானாா். அங்கேயே, அடுத்த 7 ஆண்டுகள் பணியில் இருந்த அவா், தாஜ்மஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.