அடடே! வந்தே பாரத் ரயிலில் கதவுகளைத் திறக்க இப்படியொரு தொழில்நுட்பமா?
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் கதவுகளைத் திறக்க ஏற்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் பற்றி..

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்களைப் பற்றி நாள்தோறும் பல பிரபலங்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்த வருகிறார்கள்.
அதன் மூலம், வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் மக்களுக்கு அறிமுகமாகி வருகிறது.
தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஒரு விடியோவில், வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் கதவுகளை திறக்கும் தொழில்நுட்பம் பற்றிய விடியோ வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
பொதுவாக, ரயில்களில் இருக்கும் கதவுகளை சாதாரண நபர்கள் திறக்க முடியாத வகையில் இருக்கும். ஒன்று அழுத்தித் திறப்பது, இழுப்பது அல்லது ஸ்லைடராக இயங்கும்.
ஆனால், புதிய வந்தே பாரத் ரயில்களில் உள்ள ஏசி முதல் வகுப்புப் பெட்டியின் கதவுகளை ஒன்றுமே செய்ய வேண்டாம். அங்குள்ள பச்சை நிற பொத்தான் அருகே கையை கொண்டு சென்றாலே சென்சார் மூலம் கதவுகள் திறக்கும்.
கையில் பை அல்லது குழந்தைகளுடன் செல்வோருக்கு இந்த வசதி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும்கூட எளிமையாக கதவைத் திறக்க உதவும் என்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு வசதிகளும் புதிய வந்தே பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளதாகவும் எல்இடி விளக்குகள், ஏசி வகுப்பில் இருக்கும் குளியலறையில் சுடுதண்ணீர் வசதி, துர்நாற்றம் இல்லாத கழிப்பறைகள், உள்கட்டமைப்புகளும் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன.