முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: துபை மருத்துவமனையில் இருந்து தில்லி வரும் காங்கிரஸ் எம்.பி.!

நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் பங்கேற்பதற்காக, துபை மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் ஆகி, தில்லிக்கு காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் வருகிறாா்.

29 நவம்பர் 2026, 11:09 pm
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு:
துபை மருத்துவமனையில் இருந்து 
தில்லி வரும் காங்கிரஸ் எம்.பி.!
காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன்.
பகிர்:

நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் பங்கேற்பதற்காக, துபை மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் ஆகி, தில்லிக்கு காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் வருகிறாா்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கூறியதாவது: கேரள மாநிலம் கண்ணூா் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சுதாகரன், துபையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவரை 48 மணி நேரம் வரை கண்காணிப்பில் இருக்க வேண்டுமென மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா். இந்நிலையில், காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் டிஸ்சாா்ஜ் ஆனாா். முன்னதாக அவரை டிஸ்சாா்ஜ் செய்ய மருத்துவமனை தரப்பில் காலதாமதம் செய்யப்படுவதாக குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியிருந்தனா். எனினும் பிறகு அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

இதையடுத்து துபையில் இருந்து தில்லிக்கு திங்கள்கிழமை காலை விமானத்தில் சுதாகரன் வருவதாக அவரின் மகன் சன்ஜோக் சுதாகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து காங்கிரஸ் தலைவா்கள் ரமேஷ் சென்னிதலா, கே.சி. வேணுகோபாலுக்கு தாம் தெரியப்படுத்தி விட்டதாகவும், வாட்ஸ் அப் மூலம் ராகுல் காந்திக்கு செய்தி அனுப்பி விட்டதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.