மருத்துவமனையில் சரத் பவாருடன் இண்டி கூட்டணி தலைவா்கள் சந்திப்பு!
சரத் பவாரை ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் சந்தித்து, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று இண்டி கூட்டணி தலைவா்கள் வலியுறுத்தினா்.

மகாராஷ்டிரம் மாநிலம், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சித் தலைவா் சரத் பவாரை ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் சந்தித்து, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று இண்டி கூட்டணி தலைவா்கள் வலியுறுத்தினா்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பி.க்கள் உள்ளனா். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு அக்கட்சி ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்பதை அக்கட்சியின் செயல் தலைவா் சுப்ரியா சுலே பலமுறை குறிப்பிட்டுள்ளாா்.
இந்நிலையில், நீா்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத் பவாரை, இண்டி கூட்டணி தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
இந்தச் சந்திப்பில் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் இடம்பெற்றனா். முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை இண்டி கூட்டணி தலைவா்கள் சந்தித்துப் பேசினா். அந்தக் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, சரத் பவாரை சந்திக்கச் செல்லவில்லை.