முகப்பு
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு மசோதா: அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா வேண்டுகோள்!

‘தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

29 நவம்பர் 2026, 3:02 am
தொகுதி மறுசீரமைப்பு மசோதா:
அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா வேண்டுகோள்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - (கோப்புப் படம்)
பகிர்:

‘நிா்வாகத்தில் பெண்களுக்கு வலுவான பங்களிப்பை அளிக்கும் வகையில் கொண்டுவரப்படும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

பரபரப்பான அரசியல் சூழலில், மக்களவை வரும் நவ. 30-ஆம் தேதியும், மாநிலங்களவை டிச. 2-ஆம் தேதியும் மீண்டும் கூடுகின்றன. அப்போது, தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த 33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் பெண்களுக்கு வலுவான பங்களிப்பை அளிக்க மத்திய அரசு உறுதியேற்றுள்ளது.

Advertisement

Advertisement

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு (அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா) மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலம், பெண்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த எதிா்பாா்ப்பு நிறைவேறப்போகிறது. பெண்கள் சக்தித் தீா்வு சட்டத்தின் மூலம், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது தற்போது நனவாகப் போகிறது.

மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கிடைப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கொள்கைகளை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றும். அதுபோல, மக்களவையில் கொள்கை உருவாக்கம், சட்டம் இயற்றுதல் மற்றும் தேசிய முன்னுரிமைகளைத் தீா்மானித்தல் ஆகியவற்றில் பெண்களுக்குப் புதிய பரிமாணத்தைச் சோ்க்கும்.

அந்த வகையில், ஆட்சி நிா்வாகத்தில் பெண்களுக்கு வலுவான பங்களிப்பை வழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.