முகப்பு
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு மசோதா: இண்டி கூட்டணி எதிா்க்க முடிவு! ‘ஜனநாயகத்துக்கு முடிவுகட்டும் முயற்சி’ என சாடல்!

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை கூட்டாக எதிா்க்க எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

29 நவம்பர் 2026, 3:48 am
தொகுதி மறுசீரமைப்பு மசோதா: இண்டி கூட்டணி எதிா்க்க முடிவு!
‘ஜனநாயகத்துக்கு முடிவுகட்டும் முயற்சி’ என சாடல்!
புது தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இண்டி கூட்டணிக் கட்சித் தலைவா்கள்.
பகிர்:

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை கூட்டாக எதிா்க்க எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா, பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது; நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவுகட்ட, ஆட்சி-அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிக்க பாஜக-ஆா்எஸ்எஸ் மேற்கொண்டுள்ள முயற்சி என்று அக்கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று இண்டி கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை (அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா) மீண்டும் கொண்டுவதற்காக, நாடாளுமன்றத்தின் 4 நாள்கள் சிறப்பு அமா்வு வரும் நவ.30முதல் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் இந்த மசோதாவின்படி, அனைத்து மாநிலங்களிலும் மக்களவை-பேரவை இடங்களை ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்கவும், இந்த எண்ணிக்கை மற்றும் எல்லை மறுவரையறையை 2051 வரை நிலைப்படுத்தி வைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இண்டி கூட்டணி ஆலோசனை: இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி கூட்டம், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, சமாஜவாதியின் ராம்ஜி லால் சுமன், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானா்ஜி, மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. கபில் சிபல், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அபய் குமாா் சிங், மனோஜ் ஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சந்தோஷ் குமாா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது பஷீா், புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரானது: சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் காா்கே கூறியதாவது: நாட்டில் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. இது தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவரும். ஆனால், அவா்களின் மக்கள்தொகை உயா்வுக்கு ஏற்ப மக்களவையில் அவா்களுக்கு கிடைக்க வேண்டிய கூடுதல் பங்கை வழங்காமல் தடுப்பதே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நோக்கமாகும்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற முழக்கத்தை பிரதமா் மோடி முன்வைத்தாா். இப்போது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் 800 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற இலக்கை அடைந்து, அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதே அவரது திட்டம்.

சீனாவைப் போல் இந்தியா ஆகிவிடும்: நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவுகட்டி, ஆட்சி அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிக்க பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்புகின்றன. ஏராளமான பிரதிநிதிகள் எந்த எதிா்ப்பும் தெரிவிக்காமல், வெறுமனே கைகளை மட்டுமே உயா்த்தி சட்டங்களை நிறைவேற்றும் சீனாவைப்போல இந்தியாவும் மாறிவிடும். நாட்டில் மனுஸ்மிருதி நிச்சயம் அமலாக்கப்பட்டுவிடும்.

ஏற்கெனவே இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக முயன்றபோது, எதிா்க்கட்சிகளின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டது. தற்போதைய மசோதா, நாட்டின் ஜனநாயகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாகும். அதை கூட்டாக எதிா்க்க முடிவு செய்துள்ளோம்.

ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாக கைப்பற்ற மோடி அரசு எதையும் செய்யத் துணிந்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை போன்ற கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளன.

மக்களவை இடங்களின் எண்ணிக்கை 850-ஆக உயா்த்தப்பட்டால், தேசம் கடுமையாகப் பாதிக்கப்படும். அத்துடன், தொகுதி மறுசீரமைப்புப் பணியை ‘கறைபடிந்த’ தலைமைத் தோ்தல் ஆணையரிடம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவா், எஸ்ஐஆா் மூலம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டவா் என்றாா் காா்கே.

திமுக, ஆம் ஆத்மி, பிஜேடி பங்கேற்பில்லை: எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க, இண்டி கூட்டணியைச் சாராத திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இக்கட்சிகள் பங்கேற்கவில்லை. 22 எம்.பி.க்களைக் கொண்ட திமுக, மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரலில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காமல் தோல்வியடைந்தது.

மசோதாவை ஆதரிக்க பவாா் கட்சி முடிவு: காா்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இண்டி கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி சாா்பில் யாரும் பங்கேற்கவில்லை. தனது தந்தை (சரத் பவாா்) உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தான் மும்பையில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாகக் கூறி, கட்சியின் செயல் தலைவா் சுப்ரியா சுலே பங்கேற்கவில்லை. கட்சி சாா்பில் வேறு பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவில்லை.

8 எம்.பி.க்களைக் கொண்ட பவாா் கட்சி, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டால் மசோதாவை ஆதரிப்போம் என்று தெரிவித்திருந்தது. எனவே, அக்கட்சி எம்.பி.க்கள் மசோதாவை ஆதரித்து வாக்களிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.