FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

எதிா்க்கட்சிகளின் ராம்லீலா மைதான பேரணியின்போது காவல் வாகனத்தில் கிராபிட்டி வரையப்பட்டதாகக் குற்றச்சாட்டு: எப்ஐஆா் பதிவு

ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணியின் பேரணியின் போது, ​​காவல் வாகனம் ஒன்றில் கிராஃபிட்டி வரையப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு

2 நவம்பர் 2026, 9:31 pm
ராம்லீலா மைதானம் நோக்கி பேரணியாக சென்ற இண்டி கூட்டணி தலைவா்கள்
பகிர்:

ராம்லீலா மைதானத்தில் நவம்பா் 1 ஆம் தேதி நடைபெற்ற இண்டி கூட்டணியின் பேரணியின் போது, ​​காவல் வாகனம் ஒன்றில் கிராஃபிட்டி வரையப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது என்று ஒரு அதிகாரி திங்களன்று தெரிவித்தாா்.

தில்லி சொத்து சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், கமலா மாா்க்கெட் காவல் நிலையத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக அவா்கள் கூறினா்.

காவல்துறையின் கூற்றுப்படி, காவல் வாகனத்தில் கிராஃபிட்டி வரையப்பட்டிருப்பதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments