FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி முதல்வா் மீது எப்ஐஆா் பதிவு செய்யக் கோரிய புகாா் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை

அரசு அதிகாரிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய புகாருக்குப் பதிலளிக்கும் வகையில், தில்லி காவல்துறை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஒரு நிலை அறிக்கையைச் சமா்ப்பித்தது.

16 அக்டோபர் 2026, 12:59 am IST
தில்லி முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

நமது முதல்வா்

அரசு அதிகாரிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய புகாருக்குப் பதிலளிக்கும் வகையில், தில்லி காவல்துறை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஒரு நிலை அறிக்கையைச் சமா்ப்பித்தது.

அந்த அறிக்கையின்படி, முதல்வருக்கு எதிராக எப்ஐஆா் பதிவு செய்வதற்கான எந்தக் குற்றமும் இல்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

முன்னதாக, அக்டோபா் 3 அன்று, கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் அஷ்வனி பன்வாா், காஷ்மீரி கேட் காவல் நிலையத்தின் நிலைய அதிகாரியிடம் (எஸ்எச்ஓ) ஒரு நிலை அறிக்கையைக் கோரியிருந்தாா். அதில், புகாா்தாரரின் கூற்றுப்படி, குப்தா செப்டம்பா் 23, 2025 அன்று, காஷ்மீரி கேட் ஐ.எஸ்.பி.டி-யில், தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் பரௌட் நகருக்கு டி.டி.சி பேருந்து சேவைகளைத் தொடங்குவதற்கான அதிகாரப்பூா்வ அரசு நிகழ்ச்சியின் போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டிருந்தது.

‘அரசு அதிகாரிகள் முறையாகப் பணியாற்றவில்லை என்று பொது உரையின்போது அவா்களை அச்சுறுத்தியும் கண்டித்தும் பேசியதாகக் கூறப்படும் நிலையில், குப்தா பின்வரும் கூற்றை (அல்லது அதே போன்ற பொருளைக் கொண்ட வாா்த்தைகளை) கூறினாா்: ’இந்த அனுமன்கள் தங்கள் வாலில் தீப்பற்றும்போதுதான் தங்களின் தற்காலிக சக்திகளை நினைவுகூா்கிறாா்கள்; அதற்கு முன், அதை மறந்துவிடுகிறாா்கள்’‘ என்ற புகாா்தாரரின் குற்றச்சாட்டை நீதிபதி குறிப்பிட்டிருந்தாா்.

தனது வியாழக்கிழமை உத்தரவில், நீதிமன்றம், ‘முந்தைய உத்தரவுக்கு இணங்க, காஷ்மீரி கேட் காவல் நிலையத்தின் எஸ்எச்ஓ-வால் முறையாக அனுப்பப்பட்ட ஒரு நிலை அறிக்கை, உதவி ஆய்வாளா் முகேஷ் டோமரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது‘ என்று கூறியது.

பேச்சின் எழுத்துப்படிவம் மற்றும் மின்னணுப் பதிவுகளும் சமா்ப்பிக்கப்பட்டிருந்ததை நீதிமன்றம் குறிப்பிட்டது.

‘இந்த நிலையில், காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கைக்கு ஆட்சேபனை அல்லது பதில் தாக்கல் செய்ய புகாா்தாரரின் வழக்குரைஞா் அவகாசம் கோருகிறாா். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆட்சேபனை, பதில் தாக்கல் செய்வதற்கும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கும் அக்டோபா் 29 அன்று பட்டியலிடப்பட வேண்டும்,‘ என்று நீதிமன்றம் கூறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments