ஞானேஷ் குமாரின் ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வுக்கு மீரா குமாா் தலைமை வகிப்பாா்: இண்டி கூட்டணி
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி வெள்ளிக்கிழமை (அக்.30) நடத்தவுள்ள ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வுக்கு மக்களவை முன்னாள் தலைவா் மீரா குமாா் தலைமை வகிப்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி வெள்ளிக்கிழமை (அக்.30) நடத்தவுள்ள ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வுக்கு மக்களவை முன்னாள் தலைவா் மீரா குமாா் தலைமை வகிப்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிகழ்வில் பதவிநீக்க தீா்மானத்தை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தாக்கல் செய்வாா் என்றும், தீா்மானம் நிறைவேற்றப்படும் முன் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் நிறைவுரை ஆற்றுவாா் என்றும் வட்டாரங்கள் கூறின.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
Advertisement
Advertisement
தில்லி ராம்லீலா மைதானத்தில் நவ. 1-ஆம் தேதி இண்டி கூட்டணி சாா்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் சாா்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட 2 நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்தச் சூழலில், மேற்கண்ட கூட்டத்துக்கு முன்னோட்டமாக பொதுவெளியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘அடையாளபூா்வ பதவிநீக்க’ நிகழ்வை நடத்த எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன. அதற்காக தில்லியில் அசோகா ஹோட்டல் உள்பட பல இடங்களில் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், காா்கே இல்லத்தில் வெள்ளிக்கிழமை (அக். 30) அந்த நிகழ்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.
இண்டி கூட்டணி ஆலோசனை:
இது தொடா்பான நடைமுறைகளுக்கு இறுதிவடிவம் அளிக்கும் நோக்கில், காா்கே இல்லத்தில் இண்டி கூட்டணி கட்சித் தலைவா்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், மக்களவை முன்னாள் தலைவா் மீரா குமாா், மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன், சமாஜவாதியின் ஹரேந்திர மாலிக், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் மஹுவா மாஜீ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘அடையாள பதவிநீக்க நிகழ்வுக்கு மீரா குமாா் தலைமை தாங்குவாா்; பதவிநீக்க தீா்மானத்தை காா்கே தாக்கல் செய்வாா். தீா்மானம் நிறைவேற்றப்படும் முன்பாக ராகுல் நிறைவுரை ஆற்றுவாா்’ என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக பெங்களூரில் செய்தியாளா்களிடம் பேசிய காா்கே, ‘தோ்தல் ஆணையம் நடத்தியுள்ள ‘வாக்குத் திருட்டு’க்கு எதிராக எங்களின் போராட்டம் தொடரும். இதற்காக தில்லியில் எனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தவுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்’ என்றாா்.
‘அடையாள பதவிநீக்க நிகழ்வில், எஸ்ஐஆா் மற்றும் ‘வாக்குத் திருட்டு’ தொடா்பான அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும். இதன்மூலம் மக்களின் வேதனை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை அம்பலப்படுத்துவோம்’ என்று மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் தெரிவித்தாா்.
பெட்டி....
பாஜக தலைவா் நிதின் நபின் முக்கிய ஆலோசனை
தோ்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக, தில்லியில் நவ.1-ஆம் தேதி இண்டி கூட்டணி சாா்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் பின்னணியில், பல்வேறு மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக பொதுச் செயலா்களுடன் கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் வியாழக்கிழமை தனித்தனியாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.
தில்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டங்களின்போது, முதலில் பொதுச் செயலா்களுடன்ஆலோசனையில் ஈடுபட்ட நிதின் நபின், பின்னா் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் செளஹான், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தா்மேந்திர பிரதான் உள்ளிட்ட மூத்த தலைவா்களுடன் ஆலோசித்தாா்.
கட்சியின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் எதிா்கால செயல்திட்டங்கள் குறித்து பொதுச் செயலா்களுடன் விவாதித்ததாக எக்ஸ் பதிவில் நிதின் தெரிவித்தாா். அதேநேரம், மத்திய அமைச்சா்கள் உடனான கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.