FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்பு

வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என பரவி வரும் பொய்ச் செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு குறித்து..

வங்கி - பிரதிப் படம்
பகிர்:

வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களின் கோரிக்கைக்கு இணங்க பொதுத்துறை வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை அளித்து, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் என மத்திய அரசு அறிவித்ததாக சமூக ஊடகங்களில் அறிவிக்கை ஒன்று வெளியானது. இந்த நிலையில், வங்கிகளில் 5 நாள்கள் மட்டுமே வேலை நாள் என சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிக்கை பொய்யானது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளதாவது, ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை அளித்து நிதி அமைச்சகம் அறிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தச் செய்திகள் போலியானவை.

Advertisement

Advertisement

பொதுத்துறை வங்கிகளுக்கு சனிக்கிழமைகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக எந்தவொரு அறிவிப்பையும் நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது வங்கிகளில் மாதத்தின் 2 மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முதல், 3, 5 ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும்.

இதனிடையே, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, செப். 28, 29, 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். இருப்பினும், இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

summary

The Central Government has denied the false reports circulating about public sector banks being closed on all Saturdays

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments