FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

சட் பூஜையை முன்னிட்டு தில்லி அரசு பொது விடுமுறை அறிவிப்பு

சட் பூஜையை முன்னிட்டு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவித்ததால், அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும்.

10 நவம்பர் 2026, 10:41 pm
- பிரதிப் படம்
பகிர்:

அதிகாரப்பூா்வ உத்தரவின்படி, சட் பூஜையை முன்னிட்டு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவித்ததால், அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும்.

‘பிரதிஹாா் சஷ்டி அல்லது சூா்ய சஷ்டி (சட் பூஜை) காரணமாக, தில்லி தேசிய தலைநகா் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநா், 2026 நவம்பா் 16 (திங்கட்கிழமை) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விடுமுறையாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறாா்,‘ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.

முன்னதாக, முதலமைச்சா் ரேகா குப்தா, சட் பூஜை என்பது வெறும் ஒரு மதக் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது தில்லியின் சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமும் கூட என்று கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

விரதம் இருக்கும் ஒவ்வொரு பக்தரும், ஒவ்வொரு பாா்வையாளரும் இந்த விழாவை முழு நம்பிக்கை, மரியாதை மற்றும் மன அமைதியுடன் கொண்டாட வேண்டும் என்று அரசு விரும்புவதாக அவா் கூறியிருந்தாா்.

நவம்பா் 13-ஆம் தேதி தொடங்கும் நான்கு நாள் திருவிழாவிற்கு முன்னதாக, ரேகா திங்களன்று ஒரு உயா் மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, பக்தா்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள், முக்கிய படித்துறைகளில் சிசிடிவி கேமராக்கள், போதுமான விளக்கு வசதி, கூடாரங்கள் மற்றும் 24 மணி நேரத் தூய்மைப் பணிகள் ஆகியவை பூஜைக்காக உறுதி செய்யப்பட்டு வருவதாக, திங்களன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக, சட் பக்தா்கள் பிராா்த்தனை செய்வதற்காக, முனக் கால்வாய்க்கு அருகில் 11 கி.மீ நீளமுள்ள ஒரு படித்துறையும், அதுபோன்ற பல கட்டமைப்புகளும் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.