FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாக்காளர்கள் பட்டியலில் சிறுபான்மையினரை நீக்க முயற்சி! பாஜக தலைவர் மீது வழக்கு

கர்நாடகத்தில் சிறுபான்மை சமூக வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து பாஜக தலைவர் நீக்க முயற்சித்தது குறித்து...

ரவி பாட்டீல்
பகிர்:

கர்நாடகத்தில் சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சித்ததாக பாஜக தலைவர் ரவி பாட்டீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் என ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஒவ்வொரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைவர் ரவி பாட்டீல், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சிறுபான்மையின வாக்காளர்களை நீக்க முயற்சித்ததாக வாக்குச்சாவடி நிலை முகவராகப் பணியாற்றிவரும் மீராசாப் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

ரவி பாட்டீல் மீது மீராசாப் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, எஸ்ஐஆர் பணிகளில் வட்டார அலுவலருக்கு உதவுவதாகவும், வாக்காளர்களின் தகவல்களைச் சரிபார்க்க உதவுவதாகவும் கூறி, செப். 22-ல் ரவி பாட்டீல், சங்கர் நாயக், தீபக் உள்பட சுமார் 25 பேர் வந்தனர்.

ஆனால், வாக்காளர்கள் பட்டியலில் இருந்து198 வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக அவர்கள் சதித் திட்டம் தீட்டினர். போலி ஆவணங்களை உருவாக்கி, அவை உண்மையானவை என்றும், தேர்தல் பதிவு அலுவலகத்தால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டவை என்றும் பொய்கூறி, அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி வாக்காளர்கள் அளித்ததாய் பொய்கூறி, ரவி பாட்டீல் அளித்த படிவம்-7 விண்ணப்பங்களில் என்னுடைய மற்றும் என் குடும்பத்தினரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

வாக்காளர் பட்டியலில் இருந்து 198 முஸ்லிம் சமூக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அது வன்முறையாகி விடும். அதன் மூலம் மாநிலத்தில் அமைதியையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்திலேயே அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ரவி பாட்டீல் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

summary

Case against Karnataka BJP leader for trying to delete 198 minority voters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments