‘கர்நாடகம்: எஸ்ஐஆரில் 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி’ - முதல்வர் சிவகுமார்
கர்நாடகத்தில் எஸ்ஐஆரில் 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்துள்ளதாக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளதைப் பற்றி...
கர்நாடகத்தில் எஸ்ஐஆரில் 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்துள்ளதாக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் போது, முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்க முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், முன்பே அச்சிடப்பட்ட போலி படிவம்-7 விண்ணப்பங்கள் மூலமாக முஸ்லிம் வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்ட விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயர் தவறாக இருந்தாலோ, அவர் இறந்துவிட்டாலோ, வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாலோ அவரது பெயரை நீக்கக் கோரி படிவம்-7 வழங்கப்படும்.
ஆனால், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் உயிருடன் இருக்கும் வாக்காளர்களை ‘இங்கு இவர் வசிக்கவில்லை’ என்று கூறி நீக்க இந்த படிவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்டறியந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்களை நீக்குவதற்கு முயற்சி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் டி.கே. சிவகுமார் பேசும்போது, “வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது. 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், பாஜகவைச் சேர்ந்தவர்கள் படிவம்-7-ஐ பெற்று வருவதை நாங்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளோம். இந்தப் படிவம் 7 விண்ணப்பங்கள் செப். 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டுள்ளன.
EPIC எண்கள் மற்றும் முகவரிகள் போன்ற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் எப்படி அவர்களுக்கு கிடைத்தது. இந்தத் தரவுகளை யார் கொடுத்தார்கள். இதை யார் செய்கிறார்கள். விஜயபுரா நகரில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலிலிருந்து 45 லட்சம் வாக்காளர்களை சட்டவிரோதமாக நீக்குவதற்கு 'சதி' நடந்துள்ளது. இந்த மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில், இங்குள்ள அனைத்து ஏழை மக்களையும் சிறுபான்மையினரையும் நான் பாதுகாக்கவில்லை என்றால், இந்தப் பதவியில் இருக்க தகுதியற்றவன். மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனையும் ஒவ்வொரு வாக்காளரையும் நான் பாதுகாப்பதை என்னுடைய கடமை. அவர்களில் பாஜக வாக்காளர்களும்தான்” என்றார்.
DK Shivakumar accused BJP and JD(S) leaders of filing bulk Form 7 applications to delete eligible voters during Karnataka's electoral roll revision. He demanded a criminal enquiry, saying the alleged targeting of vulnerable communities threatened voting rights.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.