FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஹைதராபாத்: அவசரகால கதவின் கைப்பிடியை தவறுதலாக இயக்கியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் விமானம் புறப்பட இருந்த நேரத்தில், விமானத்தின் அவசரகால கதவின் கைப்பிடியை தவறுதலாக இயக்கியதால், எச்சரிக்கை அலாரம் ஒலித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயணி விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

விமானம் - கோப்புப் படம்
பகிர்:

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் விமானம் புறப்பட இருந்த நேரத்தில், விமானத்தின் அவசரகால கதவின் கைப்பிடியை தவறுதலாக இயக்கியதால், எச்சரிக்கை அலாரம் ஒலித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயணி விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சா்வதேச விமான நிலையதத்தில் வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஹைதராபாதிலிருந்து கடப்பாவுக்குச் செல்லும் விமானத்தில், விமானம் புறப்பட இருந்த நேரத்தில் 35 வயது பயணி தனது இருக்கையின் பெல்ட்டை சரிசெய்தபோது, தவறுதலாக அருகிலிருந்த அவசரகால கதவின் கைப்பிடியை பிடித்து அசைத்துள்ளாா். இதனால், விமானத்தில் அபாய எச்சரிக்கை மணி ஒலித்து, சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, அந்தப் பயணியை விமான ஊழியா்கள் விமானத்திலிருந்து இறக்கிவிட்டு, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் எந்தவித உள்நோக்கமும் இன்றி, தவறுதலாக அவசரகால கதவின் கைப்பிடியை இயக்கியது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அந்தப் பயணியிடம் எழுதுபூா்வமாக விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு, அவரை போலீஸாா் விடுவித்தனா். அவா் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments