செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்
செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள் பற்றி ஃபோர்டு நிர்வாகி விளக்கம்..
செய்யறிவு எனப்படும் ஏஐ உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், செய்யறிவால் பறிபோகும் வேலைகளும் அதனால் அசைத்துப் பார்க்க முடியாத வேலைகள் பற்றியும் ஃபோர்டு நிறுவன தலைமை செயல் நிர்வாகி ஜிம் ஃபார்லே தெளிவாகப் பேசியிருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள பல வேலைகளை செய்யறிவு மிக எளிதாக நிரப்பிவிடும், ஆனால், சில வேலைகளை மனிதர்களின் கண்காணிப்பின்றி செய்யறிவால் மேற்கொள்ள இயலாது, அப்படிப்பட்ட பணிகள் எப்படியும் மாறாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் வேலைகள் எப்போதும் செய்யறிவால் மாற்றப்படாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
Advertisement
Advertisement
தொழிற்சாலைகள், பழுதுபார்க்கும் பட்டறைகள் மற்றும் திறன்மிகு தொழில்கள் போன்றவற்றில் வேலை செய்யும் ஊழியர்களின் பணிகள் செய்யறிவால் பாதிக்கப்படாது. மாறாக இவர்களின் வேலை செய்யறிவின் உதவியோடு பல மடங்கு மேம்படும். இவர்களது வேலை எளிமையாக்கப்படும், சிறப்பாக்கப்படும். அதாவது இதுபோன்ற பணிகள் செய்யறிவைக் கொண்டு செய்யும்போது பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பெரும்பாலும் வெள்ளை-காலர் பணிகள்தான் பெரிய அளவில் அபாயத்தை எதிர்கொள்ளும். நிதித்துறையில், கணக்குகளை பதிவு செய்பவர்கள், கால்-சென்டர் பணிகள், டேட்டாக்களை பதிவு செய்வோர், புரோகிராமர்கள் போன்றவர்களின் பணிகள் செய்யறிவின் முதல் அலையிலேயே பணியை இழக்கும் நிலை ஏற்படலாம் என்கிறார் ஜிம்.
ஒரு பிரச்னையை கைகளால் சரி செய்ய வேண்டியது இருந்தால், அதுபோன்ற பணிகளை செய்யறிவு சரி செய்ய இயலாது. தொழில்ரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்களை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டு சரி செய்யும் பணியில் உள்ளவர்கள் நிம்மதி அடையலாம்.
எலக்ட்டிரிஷியன், டெக்னீஷியன், மெக்கானிக், தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்கள் போன்றவர்களை செய்யறிவால் நிரப்ப முடியாது. என்னதான் சில பணிகள் தானியங்கி முறையில் மாற்றப்பட்டாலும் தொழிலாளர் பங்கு நிச்சயம் இருக்கும்.
இவற்றிலும் செய்யறிவு ரோபோக்கள் வந்துவிட்டாலும், பிரச்னையை கண்டறிந்து, எந்தவிதமான பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய மனித மேற்பார்வை தேவைப்படும், செயல்பாட்டு முறையிலான அறிவு தேவைப்படும். அதுதான் முற்றிலும் பாதுகாப்பானதும்கூட.
போர்டு நிறுவனத்தில், நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் நேரம் குறைந்து, ரோபோக்கள், தானியங்கி உற்பத்தி அமைப்பு மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு தொழில்நுட்பப் பணிகளை அதிகம் மேற்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாகச் செயல்பட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, உடல்ரீதியான திறன் மற்றும் நடைமுறைச் சூழலுக்கேற்ற முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய பணிகளைச் செய்பவர்கள் தாக்குபிடிக்க முடியும். தானியங்கி மயமாக்கல் நடைபெற்றாலும் மின் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திரப் பழுதுபார்ப்பவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் திறன் சார்ந்த பணிகளைச் செய்பவர்களுக்கான தேவை தொடர்ந்து இருக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் ஜிம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.