FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறைக்குச் செல்லவும் தயார்! - ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி இன்று போராட்டம்...

மும்பை சிவாஜி பூங்காவில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள்... - CJP
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) தலைமையிலான போராட்டம் மும்பையில் இன்று (அக்.2) தொடங்கியது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு எதிரான வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டின் ஏராளமான எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவருக்கு எதிராகக் குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் முதன்மையான இளைஞர் அமைப்பான கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இன்று மாலை 4 மணிக்கு மும்பையின் சிவாஜி பூங்காவில் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ளனர்.

இதுபற்றி, சிஜேபியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா இன்று கூறுகையில்,

“சிறைக்குச் சென்றால் 13 கோடி மக்களின் வாக்குரிமையை மீண்டும் பெற முடியும் என்றால், ஞானேஷ் குமார் தனது தவறுக்குப் பொறுப்பேற்பதை உறுதிப்படுத்த முடியும் என்றால் நாங்கள் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.

ஞானேஷ் குமார் இந்த நாட்டின் மிகப் பெரிய துரோகி, வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு அவர்தான் பொறுப்பு. இதுவரை இந்த நாட்டில் இதைவிடப் பெரிய துரோகத்தை வேறு யாரும் செய்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் தங்களின் போராட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தொடரும் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

A protest led by the CJP, demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar, begins in Mumbai today (Oct. 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments