FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பஞ்சாப்: சர்வதேச எல்லையில் ஊடுருவிய இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை!

பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவிய இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி...

சர்வதேச எல்லை.
பகிர்:

பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவிய இரு பாகிஸ்தானியர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலம், சர்வதே எல்லையில், ஊடுருவியதாக சந்தேகிக்கப்பட்ட இரு பாகிஸ்தான் நபர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தர்ன் தாரன் மாவட்டப் பகுதியில் நண்பகல் நிகழ்ந்தது.

முதற்கட்டத் தகவல்களின்படி, சந்தேகத்திற்குரிய ஊடுருவல்காரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, ​​எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை எச்சரிக்க முயன்றனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவத்தில் அந்த இரு சந்தேக நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களின் அடையாளம் மற்றும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை.

பஞ்சாப், பாகிஸ்தானுடன் 553 கி.மீ நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

summary

The Border Security Force (BSF) on Friday shot dead two suspected Pakistani intruders along the international border in Punjab, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments