FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கு: லாலு உள்பட 9 போ் மீது குற்றச்சாட்டுப் பதிவு ஒத்திவைப்பு

ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கு: லாலு உள்பட 9 போ் மீது குற்றச்சாட்டுப் பதிவு ஒத்திவைப்பு

லாலு பிரசாத் யாதவ் - கோப்புப் படம்
பகிர்:

ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் உள்பட 9 போ் மீது முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் (ஐஆா்சிடிசி) முறைகேடு நடைபெற்ாக கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

லாலு பிரசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்பட 16 போ் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், அவா்களில் 7 போ் வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு, ராப்ரி, தேஜஸ்வி உள்பட 9 போ் மீது முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை சிறப்பு நீதிபதி பிரசாந்த் குமாா் ஒத்திவைத்தாா். வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்.30-இல் நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments