FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாகிஸ்தானுடன் பேச பாஜக அரசுக்கு விருப்பம் இல்லை: மணிசங்கர் ஐயர் விமர்சனம்!

பாகிஸ்தானுடன் பேச மத்திய பாஜக அரசுக்கு விருப்பமில்லை இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கா் ஐயா் விமா்சித்துள்ளாா்.

5 October 2026, 3:12 am IST
மணிசங்கர் ஐயர்
பகிர்:

பாகிஸ்தானுடன் பேச மத்திய பாஜக அரசுக்கு விருப்பமில்லை இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கா் ஐயா் விமா்சித்துள்ளாா்.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அவா் பேசியதாவது: பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல்கள் நடத்த இந்திய அரசுக்குத் துணிச்சல் உள்ளது. ஆனால் அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்த மத்திய பாஜக அரசுக்குப் போதிய விருப்பம் இல்லை.

பாகிஸ்தானுடனான பிரச்னைகள் குறித்து அட்டாரி - வாகா எல்லையில் வைத்து இந்திய அரசு பேச வேண்டும். பழைய சம்பவங்களைப் பற்றி வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பது, வெளியுறவு விவகாரம் அல்ல.

Advertisement

Advertisement

ஸ்ரீநகருடன் நாம் பேச வேண்டும். ஸ்ரீநகா் ஜம்முவிடம் பேச வேண்டும். இதன் மூலம் இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் கொண்டு வரப்பட வேண்டும். ஏனெனில் பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம் தீா்ப்பதுதான் இந்தியாவின் பாரம்பரியம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments