FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விறுவிறுப்பாக நடைபெறும் புதுவை, மே. வங்கம், அஸ்ஸாம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு!

புதுவை, மே. வங்கம், அஸ்ஸாம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து...

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்களித்தவர். - படம்: ANI
பகிர்:

புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று (அக்.6) இடைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தது. இத்தேர்தலில் பவானிபூர், நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்றார். இதில் நந்திகிராம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரியின் முன்னாள் உதவியாளரின் தாயார் ஹசிராணி ரத் வேட்பாளராக போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் தேவ், முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசியபிறகு, தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தாா். இதையடுத்து அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதானை மம்தா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்கிறது. ரிதப்ரதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முகம்மது எதிசமுல் ஹேக் போட்டியிடுகிறார். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சந்திகோபால் கிரி போட்டியிடுகிறார்.

Advertisement

Advertisement

இதேபோல், ரெஜிநகா் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அத்தொகுதியிலும், நெளடா தொகுதியிலும் வென்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சி தலைவர் ஹுமாயூன் கபீர், ரெஜிநகர் தொகுதி பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் அங்கு இடைத் தோ்தல் நடைபெறுகிறது.

இதில் ஹூமாயூன் கபீரின் மகன் கோலம் நபி ஆசாத், பாஜக சார்பில் சாகரவ் சா்க்கார், மம்தா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ரபியூல் ஆலம் செளதரி, ரிதப்ரா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சபியூஜமான் ஷேக், காங்கிரஸ் சார்பில் முகம்மது அப்துல்லாஹி கைபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான பிரத்யூத் போர்டோலாய் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்தார். இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிபோனி போரா, பாஜக சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவாசிஸ் ஷர்மா ஆகியோா் போட்டியிடுகின்றனர்.

புதுவை

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் என். ரங்கசாமி இரண்டிலும் வெற்றி பெற்றார்.

இதில், தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

summary

By-elections are underway today (Oct. 6) for the Thattanchavady Assembly constituency in Puducherry, two Assembly constituencies in West Bengal, and one Lok Sabha constituency in Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments