FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜுக்கு ஜாமீன்: தில்லி நீதிமன்றம் அதிரடி!

சுவதந்திர பரத்வாஜுக்கு ஜாமீன் வழங்கியது பற்றி..

சுஸ்வதந்த்ர பரத்வாஜ் - X
பகிர்:

இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவரின் தந்தையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அமர்வு நீதிபதி சௌரப் பிரதாப் சிங் லலேர் சுவதந்திர பரத்வாஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக, வழக்கமான ஜாமீன் கோரும் மனுவைப் பரிசீலிக்கும்போது அவரது நடத்தை கருத்தில் கொள்ளப்படும் என்று கூறி, செப்டம்பர் 15 அன்று நீதிமன்றம் அவருக்கு மூன்று வாரக் கால இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது.

Advertisement

Advertisement

இடைக்கால ஜாமீன் வழங்கும்போது, ​​சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு எந்த ஊடகத்திலோ இந்த வழக்கு, தனது தரப்பு வாதம் அல்லது புகார்தாரரின் குடும்பம் குறித்துப் பதிவிடவோ, வெளியிடவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

மேலும், புகார்தாரர், அவரது மகள் அல்லது சாட்சிகள் ஆகியோரைத் தொடர்பு கொள்ளவோ ​​அல்லது வழக்கின் ஆதாரங்களில் தலையிடவோ கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இடைக்கால ஜாமீன் வழங்கும்போது, ​​ஜாமீன் என்பது நீதிமன்றத்தின் நம்பிக்கையின் வெளிப்பாடு, அது "காட்சிப்படுத்துவதற்காக அல்ல" என்று நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் நீதிமன்றம் பரத்வாஜை எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், சுவதந்திர பரத்வாஜுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அவரது நடத்தை கண்காணிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இன்று ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான ஜாமீன் உத்தரவுக்கான நகல் இன்னும் வெளியாகவில்லை.

வழக்கு என்ன?

ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான சுவதந்திர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வீதியின் காவல் நிலையத்திற்கு அருகே சிஜேபியினர், பரத்வாஜ் மீது கடுமையான நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, புலந்த்ஷஹரில் செப். 4ல் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments